பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவியை பெற்ற தனுஷ் தந்தை

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் கட்சியில் ஒருசில அதிரடி மாற்றங்கள் செய்ததோடு, புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகைகள் சிலரும் பதவியை பெற்றனர்.

குறிப்பாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா, நடிகை குட்டிபத்மினி, நடிகை கௌதமி, நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களும் தமிழக பாஜகவில் முக்கிய பதவியை பெற்றுள்ளனர்.

தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது.