சிம்புவை வாழ்த்தும் எனது ரசிகர்கள் : தனுஷ் பெருமை

  • IndiaGlitz, [Friday,May 27 2016]

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படம் வெற்றியடைய தனுஷ் ரசிகர்கள் சிம்புவுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோலிவுட் திரையுலகில் சிம்பு மற்றும் தனுஷ் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வதுண்டு. ஆனால் தற்போது சிம்புவின் படம் வெற்றி அடைய தனுஷ் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது, எனது ரசிகர்கள் பக்குவம் அடைந்திருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது. இது தொடர வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்ட பிரிமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் 'இது நம்ம ஆளு' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுந்தர் சிக்கு அரசியல் கற்று கொடுத்த குஷ்பு

பிரபல நடிகை குஷ்பு நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமான ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.

சிம்பு-பாண்டிராஜின் 'இது நம்ம ஆளு' திரை முன்னோட்டம்

பாண்டிராஜின் முதல் படமான 'பசங்க' படத்தில் இருந்தே அவருடைய படம் என்றாலே நகைச்சுவை, காதல், கடைசியாக ஒரு மெசேஜ் என்ற பார்முலா இருக்கும்.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? கமல் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நயன்தாராவை லேடி சூர்யா என்று அழைப்பது ஏன்? பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'இது நம்ம ஆளு' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்தும், இதில் நாயகியாக நடித்த நயன்தாரா குறித்தும் இயக்குனர் பாண்டிராஜ் மனம் விட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் அதிரடி முயற்சியால் திருட்டு டிவிடி கும்பல் தலைவன் கைது

தமிழ்த் திரையுலகை தற்போது ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஒரே பிரச்சனை திருட்டுடிவிடி பிரச்சனைதான்...