புத்துயிர் அளியுங்கள்: தனுஷ் ரசிகர்களின் திடீர் போஸ்டர்களால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

தனுஷ் பட தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவே தான் விரும்புவதாக தனுஷும் சமீபத்தில் டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் ’ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரான தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நெல்லையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ’எங்கள் அன்புத் தலைவர் தனுஷ் அவர்களின் வெற்றி படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்குகளை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு ஒய்நாட் நிறுவன தயாரிப்பாளரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று ’ஜகமே தந்திர’ம் திரைப்படத்தை திரையரங்குகளில் தயாரிப்பாளர் வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசம்? இப்படி ஒரு ஆஃபரா!

மாதக் கணக்கில் காதலர் தினத்திற்காக காத்திருந்து காதலை சொல்லும் இளசுகளுக்கு மத்தியில் காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசமாகப் பெற்றுத் தரப்படும் என்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திட்டம் போடுவது மட்டுமின்றி செயல்படுத்தவும் செய்கிறார்: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு!

திட்டம் போடுவது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்கிறார் என உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பாராட்டு தெரிவித்தது

திருநங்கையாக மாறிய WWE சூப்பர் ஸ்டார்!

முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் Gabbi Tuft திருநங்கையாக மாறி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அடுத்தடுத்து அதிர்ச்சி: மீண்டும் விபத்தில் சிக்கிய பிரபாஸ் படக்குழு!

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' நாயகன் பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்' என்ற படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே மிகப்பெரிய தீவிபத்து

சினிமாவில் நாயகியாகும் மற்றொரு விஜே!

தொலைக்காட்சிகளில் விஜே ஆக பணிபுரிந்து கொண்டிருக்கும் பலர் பெரிய திரையிலும் நடித்து வருகின்றனர் என்பதும் விஜய் டிவி புகழ் டிடி, ரம்யா, ஜாக்குலின் உள்பட பலர் திரையுலகில் நடித்து வருகின்றனர்