ஜூலை 28ல் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்தா?

  • IndiaGlitz, [Sunday,July 23 2023]

இன்று சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் நடித்த ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் அவர் அடுத்ததாக இயக்கி நடிக்கும் ’D50’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தனுஷ், எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் வடசென்னை பின்னணியாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் மற்றும் ’D50’ படத்தின் டைட்டில் போஸ்டர் ஆகிய இரண்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'இந்தியன் 2' படத்தின் VFX காட்சிகள்: வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட ஷங்கர்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது  தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் கம்ப்யூட்டர்

செக்க செவேல்ன்னு ஒரு போட்டோஷூட்.. ரம்யா பாண்டியனின் வேற லெவல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் செக்க   செவேல்ன்னு

ஜூலை 28ல் 8 தமிழ் படங்கள் ரிலீஸ்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8 தமிழ் படங்கள் வெளியாக உள்ளதாக

சமந்தாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..! இந்த ஆண்டின் முதல் வெற்றி கிடைக்குமா?

சமந்தா நடித்த 'யசோதா' மற்றும் 'சாகுந்தலம்' ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

'கோமாளி' பட நடிகையா இவர்? தாய்லாந்து கடற்கரையில் பிகினியில் கவர்ச்சி..!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை  தாய்லாந்து கடற்கரையில் பிகினி உடையில் செம போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி