ஸ்டெர்லைட் போராட்டத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு
- IndiaGlitz, [Thursday,May 24 2018]
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேல் அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர்களும், நேற்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர்களும் மரணம் அடைந்தனர்
இந்த போராட்டத்தில் பலியானவர்களில் கோலிவுட் திரையுலகின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவரும் ஒருவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதே போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் ஒருவர் தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகியும் ஒருவர் தற்போது தெரியவந்துள்ளது. ஈடு செய்ய முடியாத ரசிகரின் இழப்பு குறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்' என்று தனுஷ் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.
— Dhanush (@dhanushkraja) May 24, 2018