ஸ்டெர்லைட் போராட்டத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத  இழப்பு

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேல் அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர்களும், நேற்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர்களும் மரணம் அடைந்தனர்

இந்த போராட்டத்தில் பலியானவர்களில் கோலிவுட் திரையுலகின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவரும் ஒருவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதே போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் ஒருவர் தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகியும் ஒருவர் தற்போது தெரியவந்துள்ளது. ஈடு செய்ய முடியாத ரசிகரின் இழப்பு குறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்' என்று தனுஷ் கூறியுள்ளார்.

More News

ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம்: விஜய்சேதுபதி

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது.

பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது

தலைமை செயலகத்தில் தர்ணா: மு.க.ஸ்டாலின் கைது

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் சென்றார்.

ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: தமிழிசை

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

தூத்துகுடி செய்தியை ஒளிபரப்பிய அல் ஜசீரா தொலைக்காட்சி

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தூத்துகுடி மக்களின் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100 நாட்கள் போராட்டத்தை வட இந்திய ஊடகங்களே இதுவரை கண்டுகொள்ளமல் இருந்த நிலையில்