close
Choose your channels

NEEK படத்தை அடுத்து மேலும் 2 படங்கள் இயக்கும் தனுஷ்.. அதில் ஒன்று ஹீரோயின் சப்ஜெக்ட்..!

Wednesday, September 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு படங்களை அவர் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் ஒன்று ஹீரோயின் சப்ஜெக்ட் என்றும் அதில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமான தனுஷ் அதன் பின் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த துறைகளில் ஜொலித்து வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ’பா பாண்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான அவரது ஐம்பதாவது திரைப்படமான ’ராயன்’ திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். இதனை அடுத்து தற்போது அவர் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இதை அடுத்து நடிகை நித்யா மேனன் முக்கிய இடத்தில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை அம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி அருண் விஜய் நடிக்கும் படத்தையும் தனுஷ் இயக்க விற்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் நடிகராக ’குபேரா’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மற்றுமொரு ஹிந்தி படம் என தனுஷ் பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இயக்குனர் பணியிலும் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment