'தி நைட் மேனேஜர்' வெப்தொடருக்கு தனுஷ்பாராட்டு.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ’தி நைட் மேனேஜர்’ என்ற வெப் தொடருக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆதித்யராய் கபூர், அனில் கபூர், சோபிதா துலிபாலா உள்பட பலரது நடிப்பில் உருவான வெப் தொடர் ’தி நைட் மேனேஜர்’ . வங்கதேசத்தில் நைட் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆதித்யராய் கபூர் இடம் 14 வயது சிறுமி ஒருவர் தனக்கு இந்தியா செல்ல உதவி செய்யும்படி கோரிக்கை விடுகிறார். அவருக்கு உதவி செய்ய நைட் மேனேஜர் முயற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி கொல்லப்படுகிறார். அதன் பின் நடப்பது என்ன என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை
இந்த வெப் தொடர் விறுவிறுப்பாக இருப்பதை அடுத்து ஏராளமான பார்வையாளர்கள் இந்த தொடரை பார்த்து பாராட்டி வருகின்றார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தி நைட் மேனேஜர்’ தொடருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்
வசீகரிக்கும் கதை களத்துடன் இருக்கும் ’தி நைட் மேனேஜர்’ தொடரில் உள்ள வலுவான காட்சிகள் என்னை இறுதி வரை கவர்ந்தன’ என்று தெரிவித்துள்ளார். ஹாட்ஸ்டாரில் உள்ள ஒரு தொடருக்கு தனுஷ் பாராட்டு தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
The strong performances with a captivating plot of The Night Manager kept me hooked till the end! 💯#HotstarSpecials #TheNightManager@AnilKapoor #AdityaRoyKapur @TillotamaShome #SobhitaDhulipala @Banijayasia @deepak30000 @imrc_rajesh @banijaygroup @sandeep_modi
— Dhanush (@dhanushkraja) February 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com