சூர்யாவின் 24 டீஸரைப் புகழ்ந்து தள்ளிய தமிழ் ஹீரோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட், பாலிவுட்டில் தனது தனி முத்திரையை பதித்த நடிகர் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நடிகர் தனுஷ், நேற்று வெளியான சூர்யாவின் '24' படத்தின் டீசருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
'24' படத்தின் டீசர் அபாரமாக இருப்பதாகவும், சர்வதேச தரத்தில் அமைந்துள்ள காட்சி அமைப்புகளும், சூர்யாவின் கடினமான உழைப்பும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது என்றும் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் டீசருக்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். 'யாவரும் நலம்', 'மனம்' போன்ற படங்களை இயக்கிய விக்ரம்குமார் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The teaser of 24 is mind blowing. Very international. @Suriya_offl hard work is seen in every frame. Congrats to the team.
— Dhanush (@dhanushkraja) March 4, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments