தனுஷ் தான் தலைவரா? 'தி க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்கள் அமெரிக்காவில் நடக்கும் என்று தெரிகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படம் மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்பதும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இந்த படத்தை இயக்க உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் மார்க் க்ரேனி அளித்த பேட்டியில் தனுஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவலை லீக் செய்துள்ளார். இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதே படத்தில் சிஐஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் க்ரேனி மேலும் கூறுகையில் ’தனுஷுடன் நான் பழகியதில்லை என்றாலும் அவர் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர். ட்விட்டரில் என்னை 6 ஆயிரம் பேர்தான் பின்தொடர்கிறார்கள். அதில் எந்த ஸ்பெஷலும் இல்லை என்றாலும் தனுஷ் என்னை பின்தொடர்வதும், அவரை 9.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் மிகப்பெரிய விஷயம்’ என்று கூறியுள்ளார்

More News

பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி

ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது

அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது 

2 வருடத்திற்கு பிறகு முதல் விக்கெட்… உணர்ச்சியில் அழத் தொடங்கிய வீரரின் வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருக்கும் குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின் பவுலராக அறியப்படுகிறார்