இதுல யாரு தனுஷ்ன்னு தெரியல.. மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படம் வைரல்.!

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இதுல யாரு தனுஷ்ன்னு தெரியலை என்பது உட்பட பல கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்

அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவருடன் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி சிலை முன் உட்கார்ந்து வழிபடுவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு பல கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதில் ஒருவர், தனுஷ் மிகவும் இளமையாக இருப்பதை குறிப்பிட்டு ’இதுல யாரு தனுஷ்ன்னு தெரியல' என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ’D50’ என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.