குடும்பத்துடன் தனுஷ் கொண்டாடிய பொங்கல்.. ஒரே ஒரு நபர் மட்டும் மிஸ்ஸிங்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் ரசிகர்கள் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங் என ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்கள் தாங்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்து வரும் நிலையில் தனுஷ் தனது குடும்பத்தினர்களுடன் பொங்கல் கொண்டாடியதை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவு செய்துள்ளார்.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா விஜயலட்சுமி மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர்களுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாராய் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த தீபாவளியை தனுஷின் மகன்கள் அம்மா ஐஸ்வர்யா மற்றும் தாத்தா ரஜினியுடன் கொண்டாடிய நிலையில் பொங்கல் விழாவை அப்பா தனுஷ் மற்றும் தாத்தா கஸ்தூரிராஜாவுடன் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout