48 மணி நேரத்தில்... தனுஷூக்கு நீதிபதி அளித்த உத்தரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷின் ஆடம்பர கார் வரி விவகாரம் குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார் என்பதை பார்த்தோம். குறிப்பாக பால்காரர் உள்பட பலரும் வரியை ஒழுங்காக கட்டி வரும்போது நீங்கள் மட்டும் ஏன் வரி கட்டுவதில் இருந்து விதிவிலக்கு கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள் என்று நீதிபதி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி நடிகர் என்பதை மறைத்து தனது மனுவில் தனுஷ் குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ’நடிகர் தனுஷ் தனது சொகுசு கார் நுழைவு வரி பாக்கி ரூபாய் 30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு கோரிய மனு முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சொகுசு கார் வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது என்று கூறிய நீதிபதி, மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் இல்லை என்றால் அந்த மனுவை ஏற்க கூடாது என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments