அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் விவாகரத்து கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று ஏற்கனவே திரையுலகில் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இதனை விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் அவர்களும் ஒரு சில இடங்களில் கூறி வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது "எனது விவாகரத்து எனது சொந்த விஷயம். இது குறித்த சர்ச்சை தேவையில்லாதது. விவாகரத்து வாங்கி மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது இந்த கேள்விக்கு என்ன அவசியம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை.
என்னுடைய விவாகரத்துக்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை. நான் என்னுடைய சொந்த முடிவின் காரணமாக தான் இந்த விவாகரத்தை பெற்றேன். வேறு ஒருவரை காரணமாக வைத்து யாராவது விவாகரத்து வாங்குவார்களா? என்று கூறினார். மேலும் தனுஷ் தன்னுடைய நலம் விரும்பி என்றும் இந்த விஷயத்தில் இதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை" என்றும் அவர் கூறினார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலக காரணம் என்ன? என்பது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அமலாபால், ‘மணிரத்னம் சொன்ன கேரக்டரில் தன்னால் நடிக்க முடியாது என்று தனக்கு தோன்றியதாகவும், அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருக்கமாட்டேன் என்று கருதியதாகவும் அதனால்தான் விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments