தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்.....! அவர் குறித்த ஆச்சரியமான விஷயங்கள் என்னென்ன...?

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பன்முகம் கொண்ட கலைஞராக, தமிழ் சினிமாவில் வலம் வரும் தனுஷ் இன்று தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்ப்போம்.

சினிமாவின் துவக்க காலத்தில் உருவகேலி மற்றும் படங்கள் தோல்வி அடைந்ததால், தனுஷ் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியும், லட்சக்கணக்கான ரசிகர்களை தன்பால் வைத்துள்ளார்.

முதன் முதலில் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரித்தது நடிகர் ராஜ்கிரண் தான். தனுஷ் முதலில் இயக்கிய படத்திலும் அவர் நடித்திருப்பார். இதனால் ராஜ்கிரண் எங்கள் குடும்பத்திற்கு 'கடவுள் மாதிரி' என பலமுறை கூறியுள்ளார். அவர் மீது அளவுகடந்த மரியாதையும் உண்டு.

பாலு மகேந்திரா தனுஷை வைத்து எடுத்த திரைப்படம் “அது ஒரு கனாக்காலம்”. இதில் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றியிருப்பார். இதன் மூலமாகத்தான் தனுஷ்-ம், வெற்றிமாறனும் நண்பர்கள் ஆனார்கள். ஜிம்மில் என்னுடன் போட்டி போட்டு வொர்க் அவுட் செய்யும் வெற்றி, பின் யோகாவிற்கு மாறினார். இதற்கு காரணம் அவர் சோம்பேறி, அது எளிமையாக இருக்கும் என்பதால் தான் என்று வெற்றியை தனுஷ் கலாய்ப்பார்.

அனிருத்-ஐ இசையமைப்பாளராகவும், சிவகார்த்திகேயனை நடிகராகவும் 3 திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான்.

கோலிவுட்டில் முதன் முதலாக, டுவிட்டரில் 10 மில்லியன் பாலோவர்களை கொண்ட ஒரே நடிகர் தனுஷ்.

தனுஷை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது, சகோதரர் செல்வராகவன் தான். தற்போது இருக்கும் நிலைக்கு அண்ணன் தான் காரணம் என்றும், அவர்தான் என்னுடைய குரு என்றும் தனுஷ் அடிக்கடி கூறுவார்.

ஹிந்தி தெரியாத தனுஷ் ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அப்போது இயக்குனர் தமிழிலே நடியுங்கள், நாங்கள் டப் செய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனால் தன்னுடைய காட்சிக்கான வசனத்தை, இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து மனப்பாடம் செய்து, தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஈடுபட்டார். வசனங்களையும் ஓரிரு டேக்குகளில் முடித்தார் என்பது சிறப்புக்குரிய விஷயம்.

ஒய் திஸ் கொலவெறி பாடலில் ஆரம்பித்த தனுஷின் பாடலாசிரியர் பயணம், தட்டான் தட்டான் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் 30-திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கர்ணன் படத்தில் வந்த 'தட்டான் தட்டான்' என்ற பாடலை, வெறும் 45 நிமிடங்களில் எழுதியிருந்தார் தனுஷ்.

ஜிவி பிரகாஷ்குமார், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பலரின் இசையில் பாடினாலும், முதன்முதலாக யுவனின் இசையில் தான் தனுஷ் பாடியிருந்தார். ஆனால் அனிருத் இசையில் பாடுவது மிகவும் பிடிக்கும் என பேட்டிகளில் கூறியிருப்பார். அதிகப்படியான இசையறிவு இவரிடம் உள்ளது.

இவரின் தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் ஃப்லிம்ஸ்' மூலம், காக்கா முட்டை, விசாரணை, காலா, வடசென்னை போன்ற படங்களை தயாரித்திருந்தார். இதில் காக்கா முட்டை, விசாரணை படங்களுக்காக தயாரிப்பாளருக்கான தேசிய விருதை 2 முறை பெற்றார்.

தி கிரேமேன் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும், அடுத்து ஹாலிவுட்டிலும், இயக்குநர் சேகர் கமுலாவுடன் சேர்ந்து டோலிவுட்டிலும் நடிக்கவுள்ளார்.

இளையராஜா ரசிகரான இவர், அவரின் இசையைத்தவிர வேறு எதுவும் பெரியதில்லை எனக்கூறுவார். ராஜாவின் இசையில் இருந்து நடிப்பை கற்றுக்கொள்ளும் தனுஷ், சோகமான, மகிழ்ச்சியான, காதல் காட்சிகள் என்றால் இவரின் பாடல்களை கேட்டுக்கொண்டு நடிக்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மூலம் ஆங்கில புத்தங்களை தொடர்ச்சியாக படித்து அம்மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.

என்ன பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க, பழகப்பழத்தான் பிடிக்கும் என்ற வசனம் தன்னுடைய நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும் என தனுஷ் கூறியுள்ளார்.

கவுண்டமணியின் தீவிர ரசிகரான தனுஷ், 'பா. பாண்டி2 படத்தில் இவரை நடிக்கவைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான், அதற்குப்பின்னே அவரது மருமகன் என்று எப்போதும் கூறுவார்.

21 வயதில் திருமணம் முடித்த தனுஷிடம், ஏன் சீக்கிரம் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது, என் இளமைக்காலத்தை குழந்தைகளோடு கழிக்க விரும்புகிறேன் என்று கூறுவார்.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு அருகே, தற்போது வீடு கட்டி வருகிறார் தனுஷ்.

இவர்கள் 2 பேரும் வந்து கதை சொல்லாமல் நடிக்க சொன்னால், நடித்துவிடுவேன் என்று தனுஷ் கூறுவது அண்ணன் செல்வராகவன், மற்றொன்று நண்பர் வெற்றிமாறனைத் தான்.

அத்ரங்கிரே, மாறன், இயக்குனர் செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் - 2, தெலுங்குப்படம், மித்ரன் ஜவகருடன் ஒரு படம், தி க்ரேமேன் அடுத்தடுத்த மூன்று வருடங்களுக்கு தனுஷ் ரொம்ப பிஸி. படங்களில் நடித்துமுடித்துவிட்டுத்தான், இயக்கம் குறித்து யோசிக்க வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

 

More News

அபராதத் தொகையை நிவாரணமாக வழங்க விருப்பமில்லை: விஜய் தரப்பு பதில்

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை என விஜய் தரப்பு தனி நீதிபதி முன்பு கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

கிணறு தோண்டிய பள்ளத்தில் ரத்தினக்கல்? ஒரே நாளில் ரூ.700 கோடிக்கு அதிபதியான சம்பவம்!

இலங்கையில் வணிகர் ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் தற்செயலாக கிணறு தோண்டி இருக்கிறார்.

திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக… என்ன காரணம்?

சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

வடிவேல் பட பாணியில் .....! நகைகளை திருடியே புதிய நகைக்கடையை துவங்கிய திருடன்....!

நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர், நகைகளை திருடியே 'பாலாஜி கோல்ட் ஹவுஸ்' என்ற கடையை துவங்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.