ஜீவாவை விட தனுஷ் பெட்டரா?

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

சமீபத்தில் ரிலீசான 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவருடைய நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்தபடமான 'ரஜினிமுருகன்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் ஒரு வெற்றி பெற்ற நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'யாமிருக்க பயமே' பட இயக்குனர் டிகே இயக்கும் ஜீவா நடித்து வரும் 'கவலை வேண்டாம்' படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் திடீரென நீக்கப்பட்டார். இதுகுறித்து இயக்குனர் டிகே கூறியபோது, 'எங்கள் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்படும்போது 'ரஜினிமுருகன்' படத்தில் மட்டும் நடித்து கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் பல்க்காக கால்ஷீட் கேட்டிருந்தோம். அவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தமான நிலையில் திடீரென பிரபுசாலமன் இயக்கும் தனுஷ் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டார். எங்களிடம் இதுகுறித்து அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. ஒருவேளை ஜீவாவை விட தனுஷ் பெட்டர் என அவர் நினைத்துவிட்டாரோ? என்னவோ தெரியவில்லை' என்று கூறி சிரித்தார்.

'இதனால் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக நாங்கள் காஜல் அகர்வாலை தேர்வு செய்தோம். நான் கே.வி.ஆனந்த் அவர்களிடம் 'மாற்றான்' படத்தில் உதவியாளராக பணிபுரிந்தபோதே காஜல் அகர்வாலை எனக்கு நன்கு தெரியும். அதை வைத்து அவரிடம் மொத்தமாக கால்ஷீட்டை கேட்டபோது அவர் தயக்கம் ஏதுமின்றி கொடுத்தார். மேலும் இந்த படத்தில் பாபிசிம்ஹாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்' என்றும் இயக்குனர் டிகே மேலும் கூறினார்.

More News

தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் தராத கிளைமாக்ஸ்- ஆதிக்

'டார்லிங்' வெற்றி படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய முதல் படம் குறித்து ஒருசில விஷயங்களை மனம் திறந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ....

பாடகராகும் மற்றொரு பிரபல நடிகர்

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் பாட்டு பாடுவதும், பாட்டு பாடும் பாடகர்கள் நடிக்க வருவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளையதளபதி விஜய் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரே ஒரு பாடலையாவது பாடும் வழக்கத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகரும் பாடகராக விரும்பியுள்ளாராம்.....

'விஜய் 59' இயக்குனரின் அடுத்த புதிய முயற்சி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து அதன்பின்னர் 'ராஜா ராணி' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் 'நான்ஈ 2'?

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த படம் போன்ற பல பெருமைகளை பெற்ற 'பாகுபலி' படத்தை...

'தல 56' தாமதத்திற்கு ஸ்ருதிஹாசன் காரணமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்...