வி.ஐ.பி'யை ஒரே ஒரு நாள் முந்தியது 'மாரி'

  • IndiaGlitz, [Wednesday,July 08 2015]

தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு இந்த படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரின் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடித்த இந்த படத்திற்கு ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் வருடம் ஜூலை மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஒரு வருடம் கழித்து கிட்டத்தட்ட அதே நாளில் அதாவது ஒரே ஒருநாள் முன்னர் ஜூலை 17ஆம் தேதி 'மாரி' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.


'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு இசையமைத்த அதே அனிருத், மாரி படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வேல்ராஜ் மற்றும் தனுஷ் இணைந்த முதல் படம்
'வேலையில்லா பட்டதாரி'. அதேபோல் இயக்குனர் பாலாஜி மோகனுடன் தனுஷ் இணைந்த முதல் படம் 'மாரி' என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வேலையில்லா பட்டதாரி பெற்ற சூப்பர் ஹிட் வசூலை 'மாரி' படமும் பெறுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

More News

உதயநிதியுடன் முதல்முறையாக இணையும் இசையமைப்பாளர்

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா மீண்டும் ஒருமுறை ...

மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி 2?

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஓகே கண்மணி' சூப்பர் ஹிட் ஆன உற்சாகத்தில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.....

சிவாஜி கணேசன் பிறந்த நாளில் அஜீத் படம்?

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது......

தூங்காவனத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹீரோ

கமலின் த்ரில்லர் படமான தூங்காவனத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் ரோட்டில் இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது...

'எந்திரன்' சாதனையை முறியடிக்குமா 'பாகுபலி'

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது மிக வேகமாக புக் ஆகி வரும் ரிசர்வேஷனில் இருந்தே தெரிகிறது...