நமக்காக போராடுபவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. அப்படி நாம் இருப்பதால் நமது மருத்துவர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்
டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்
நாளை ஒரு நாள் மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு மிக அவசியம் என்றால் மட்டும் தேவையான பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். அவசிய தேவை இல்லையெனில் யாரும் வெளியேசெல்லாமல் வீட்டிலேயே இருக்கவும். ஒரு சில இளைஞர்கள் அசட்டு தைரியத்தால் வெளியே செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். மற்றபடி அரசு மற்றும் டாக்டர்கள் கூறியவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். நாளை மாலை ஐந்து மணிக்கு நமக்காக போராடி வரும் டாக்டர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்வோம். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout