தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிக்கவிருக்கும் 'கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் இணைந்து இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் நாயகி பிரியங்கா மோகன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ‘டான்’, சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன், அடுத்ததாக தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அதிதியை அடுத்து சாண்டி மாஸ்டருடன் வேற லெவலில் டான்ஸ் ஆடும் 'விருமன்' நடிகை!

இயக்குனர் முத்தையா நடிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர், சமீபத்தில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து ஒரு

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் டைட்டில் இதுவா? 46 ஆண்டுக்கு முன் வெளியான படத்தின் டைட்டில்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏகே 61'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்

அடுத்த படத்திற்கு தயாராகிவிட்ட லெஜண்ட் சரவணன்: செம யூத் புகைப்படம்!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட டிசம்பரில் வெளியாகும் 4 மாஸ் படங்கள்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட டிசம்பரில் 4 மாஸ் படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் செம அப்டேட் கொடுத்த உதயநிதி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி