தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிக்கவிருக்கும் 'கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் இணைந்து இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் நாயகி பிரியங்கா மோகன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ‘டான்’, சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன், அடுத்ததாக தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are glad to welcome the Gorgeous & Talented @priyankaamohan on board for #CaptainMiller ♥️??#PriyankaMohanInCaptainMiller @dhanushkraja @ArunMatheswaran @sundeepkishan @gvprakash @CaptainMilIer pic.twitter.com/UZ3oMTO91M
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com