close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் தகவல்.. ரசிகர்கள் குஷி..!

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அவர் நடித்துவரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற நிலையில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர் கொடைக்கானலில் இருந்து நேராக குற்றாலம் செல்வதாகவும் அங்கு இன்று முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

தனுஷ், பிரியங்கா மோகன் உள்பட குழுவினர் குற்றாலம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் இங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிகிறது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment