சிஎஸ்கே போட்டியை மகன்களுடன் பார்க்க வந்த தனுஷ்!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒருபக்கம் சிங்கம் போல் கர்ஜித்து வரும் தோனியின் படையும் இன்னொரு பக்கம் தனி ஆளாக அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் ரஸலும் போதும் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்றும் சிக்ஸர் மழை பொழியும் வானவேடிக்கை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சினங்கொண்ட சிங்கத்திடம் மதம் கொண்ட யானை தோற்று ஓடியது போல் நேற்றைய போட்டி உப்புசப்பில்லாமல் எந்தவித விறுவிறுப்பும் இன்றி முடிந்தது.

இந்த நிலையில் நேற்றைய சென்னை-கொல்கத்தா போட்டியை பார்க்க நேற்று பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அவர்களில் நடிகர் தனுஷூம் ஒருவர். தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ராவுடன் போட்டியை பார்க்க வந்திருந்த தனுஷ், போட்டி முடியும் வரை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே போட்டி என்றால் நேரில் பார்க்க தவறாமல் ரஜினி வருவார் என்பது தெரிந்ததே. ஆனால் இன்று மும்பையில் 'தர்பார்' படப்பிடிப்பு நடைபெறுவதை அடுத்து அவர் நேற்றே மும்பை சென்றுவிட்டதால் அவர் நேற்று போட்டியை நேரில் பார்க்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா! சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா: ஹர்பஜன்சிங் டுவீட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் தமிழில் டுவிட்டுக்களை பதிவு செய்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

எம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி..! கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது அனைவரும் அறிந்ததே.

'அசுரன்' பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய ஆசிரியர்: கதறி அழுத மாணவர்கள்

சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவ, மாணவியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை

ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.