மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் நேரில் ஆஜர்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்றும் சிறு வயதில் காணாமல் போனவர் என்றும் மதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறவிருப்பதால் நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், அவரை தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்நதனர். இந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சற்று முன் ஆஜராகியுள்ளார் .
நடிகர் தனுஷ் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராவதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஊடகங்களும் பெருமளவில் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கை வரும் மார்ச் 2ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout