ஐஸ்வர்யா-செளந்தர்யா யார் பெஸ்ட்? தனுஷின் பதில் இதுதான்
- IndiaGlitz, [Wednesday,June 07 2017]
கோலிவுட் திரையுலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமை தனுஷூக்கு மட்டும் உள்ளது. தந்தை கஸ்தூரி ராஜா, சகோதரர் செல்வராகவன், மனைவி ஐஸ்வர்யா தனுஷ், மச்சினி செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய நான்கு குடும்ப உறவு இயக்குனர்கள் படத்தில் நடித்துள்ளார்.
கஸ்தூரி ராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான தனுஷ் அதன் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கமென்ன' போன்ற படங்களில் நடித்தார். மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களில் நடித்த தனுஷ் ஐஸ்வர்யாவின் சகோதரி செளந்தர்யா இயக்கத்தில் 'விஐபி 2' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர்கள் சகோதரி ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரின் இயக்கத்தில் நடித்துள்ள தனுஷ், இருவரில் பெஸ்ட் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள், கலை நுணுக்கம் அறிந்தவர்கள் என்று கூறி தப்பித்துவிட்டார்.