'நானே வருவேன்' சென்சார் சான்றிதழ்: தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ’நானே வருவேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரில் இருந்து தனுஷ், அண்ணன் - தம்பி என்ற இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இருவருக்கும் இடையிலான போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டரில் ’நானே வருவேன்’ திரைப்படம் ’யுஏ’ சான்றிதழ் பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் 122 நிமிடங்கள் ரன்னிங் டைம் எனவும் அதாவது 2 மணி நேரம் 2 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளி ஆகியுள்ளன.

கதாநாயகன் வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

ஃபர்ஸ்ட்லுக்கை தூக்கி சாப்பிடும் செகண்ட்லுக்: 'துணிவு' செகண்ட்லுக்கில் மாஸ் அஜித்!

அஜித் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதை பார்த்தோம். 'துணிவு'  என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் மாஸ் அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

சிவகார்த்திகேயன் நடித்து ள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் தீபாவளி விருந்தாக

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கமல்-ஷங்கர்: மாஸ் வீடியோ வைரல்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று

அரசியல் என்னை விட்டு விலகவில்லை: ரஜினி அரசியலை தடுத்த பிரபல நடிகர்!

 ரஜினியிடம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறிய பிரபல நடிகர் 'அரசியலை விட்டு நான் விலகினாலும் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'புஷ்பா 2' படத்திலும் ஒரு 'ஓ சொல்றியா மாமா' பாடல்: நடனமாடுவது இந்த கவர்ச்சி நடிகையா?

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் நடனம் ஆடி இருந்தார்