அடுத்த பட இயக்குனர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் தனுஷ் தனது அடுத்த பட இயக்குனரை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
தனுஷ் நடித்த ’அட்ரேங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ’மாறன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவிருக்கும் ‘வாத்தி’ ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும், இவர் இயக்கியுள்ள திரைப்படமான ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்-அருண்மாதேஸ்வரம் இணையும் படத்தின் கூடுதல் விபரங்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Yes. The speculations are true. I am that fortunate actor who bagged @ArunMatheswaran ‘s next directorial. More details soon. Om Namashivaaya
— Dhanush (@dhanushkraja) December 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments