close
Choose your channels

தனுஷின் 'வடசென்னை'யில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஒரு பெரிய பிரேக்கை கொடுத்தது. இந்நிலையில் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், கருணாஸ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment