close
Choose your channels

ரூசோ பிரதர்ஸை கும்பிடு போட வைத்த தனுஷ்: வைரல் புகைப்படம்

Thursday, July 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தி க்ரே மேன்’ படக்குழுவினர் தற்போது இந்தியாவில் புரமோஷன் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் என்று கூறப்படும் ஜோரூசோ மற்றும் அந்தோணி ரூசோ ஆகியவர்களுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்படுகிறது.

தனுஷ் இந்த புகைப்படத்தில் தமிழ் கலாசாரத்துடன் வேஷ்டி சட்டையில் இருந்து பார்வையாளர்களை நோக்கி கும்பிடுகிறார். அப்போது ரூஸோ சகோதரர்களும் தனுஷ் கும்பிடுவதை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் செலுத்துகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment