ரூசோ பிரதர்ஸை கும்பிடு போட வைத்த தனுஷ்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,July 21 2022]

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தி க்ரே மேன்’ படக்குழுவினர் தற்போது இந்தியாவில் புரமோஷன் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் என்று கூறப்படும் ஜோரூசோ மற்றும் அந்தோணி ரூசோ ஆகியவர்களுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்படுகிறது.

தனுஷ் இந்த புகைப்படத்தில் தமிழ் கலாசாரத்துடன் வேஷ்டி சட்டையில் இருந்து பார்வையாளர்களை நோக்கி கும்பிடுகிறார். அப்போது ரூஸோ சகோதரர்களும் தனுஷ் கும்பிடுவதை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் செலுத்துகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் கட்டுக்கதை: நெட்பிளிக்ஸில் வருகிறது விக்கி-நயன் திருமண வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் இந்த திருமணம் குறித்த வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

'ஏகே 61' படத்திலும் பைக்கர்களா? கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற உள்ளது

லையனுக்கும் டைகருக்கும் பிறந்தவன் என் பையன்: விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' டிரைலர்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்தேவரகொண்டா நடித்து வரும் 'லைகர்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர்

சிங்கப்பூர் மலேசியாவில் புரமோஷன்: கிழிந்த ஜீன்ஸ் கிளாமரில் 'தி லெஜண்ட்' நாயகி!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி

விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? வைரலாகும் வீடியோ

விஜய் டிவி சீரியல்களில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் மற்றொரு வீடியோ