பிரபல எழுத்தாளருடன் தனுஷ்-செளந்தர்யா ரஜினி சந்திப்பு

  • IndiaGlitz, [Saturday,April 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' உள்பட ஒருசில படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் 'இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜ் படத்தையும் இயக்கியுள்ளார். தமிழ் எழுத்துலகில் இவரது எழுத்துக்கு மயங்காத தமிழர்களே எனலாம். எழுத்தாளர் பாலகுமாரன் தற்போது ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக எழுதி வருகிறார். இந்த படத்தை விஷ்ணுவர்னன் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் எழுத்தாளர் பாலகுமாரனை அவரது வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 161' திரைப்படம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனவே 'பாட்ஷா' படம் போலவே 'தலைவர் 161' படத்திற்கும் பாலகுமாரன் வசனம் எழுதுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பாகுபலி 2' இயக்குனருக்கு தனுஷ், சவுந்தர்யா புகழாரம்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாராட்டுகளும் புகழாரங்களும் குவிந்துகொண்டிருக்கின்றன...

அஜித்தின் அட்டகாசமான திருப்பு முனை திரைப்படங்கள்

அஜித்தின் அட்டகாசமான திருப்பு முனை திரைப்படங்கள்

'விவேகம்' வில்லனின் சவால் என்ன தெரியுமா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது. பாடகி சுசித்ரா

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் திரையுலக முன்னணி நட்சத்திரங்களின் ஆபாச படங்களும் வீடியோக்களும் வெளிவந்தது.

சீரியல் நடிகையுடன் முறையற்ற காதல். சட்டை கிழிந்து சந்தி சிரித்த சம்பவம்

பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தயாரித்து வரும் நெடுந்தொடர் 'வாணி ராணி'. இந்த நிறுவனத்தின் மேலாளரராக சுகுமாறன் என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் 'வாணி ராணி' சீரியலில் நடித்து வரும் நடிகை சபீதா ராயை வீட்டிற்கு வரவழைத்து முறையற்ற காதலில் ஈடுபட்டிருந்தார்...