கன்னட சூப்பர் ஸ்டாருடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த தனுஷ்.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பெங்களூர் அணியின் சொந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றாலும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது என்பதும் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற ஜெர்சி தான் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் கன்னட திரையுலக பிரபலங்கள் கண்டு ரசித்தனர். அந்த வகையில் நேற்று தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் குழுவினர்கள் போட்டியை மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர்.
குறிப்பாக தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த போட்டியை ரசித்து பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக இருக்கிறது. மேலும் சிவராஜ்குமார் பெங்களூரு அணியின் ஜெர்சி அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com