அடுத்தடுத்த நாட்களில் தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,July 24 2018]

தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தனுஷூக்கு இணையாக முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இருவர் நடித்த படங்களின் சிங்கிள் பாடல் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'விசிறி சூட்' என்ற பாடல் நாளை மறுநாள் அதாவது ஜூலை 26ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' படத்தில் இடம்பெற்ற 'வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களின் சிங்கிள் பாடல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

மோகன்லாலுக்கு எதிராக வழக்கா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், சமீபத்தில் நடிகை ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து கொள்ள சம்மதித்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழையும் விஜய் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் யாரும் பார்வையாளர்களின் மனதை தொடாத நிலையில் பிக்பாஸ் ஸ்கிரிப்டில் புதிய போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பா? நிர்மலா சீதாராமன் டுவீட்டால் பரபரப்பு

தமிழக துணை முதல்வர் இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்தது.

விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி: வெற்றி விழாவில் அசத்திய 'கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபரை கலாய்த்த தமிழ் நடிகர்

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஒருசில தமிழ் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை சமூக பிரச்சனைகளையும் திரையுலகினர்