தனுஷூக்கு ரூ.38 கோடி, சிவகார்த்திகேயனுக்கு ரூ.34 கோடி.. பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Tuesday,September 27 2022]
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களை ஒரே ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தனுஷின் படத்திற்கு ரூ.38 கோடியும், சிவகார்த்திகேயன் படத்திற்கு ரூ.34 கோடியும் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’கேப்டன் மில்லர்’ என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 1930ல் நடந்த பீரியட் படம் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.38 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய அதே நிறுவனம் ’மாவீரன்’ படத்தையும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ’மாவீரன்’ படத்திற்காக இந்நிறுவனம் ரூபாய் 34 கோடி வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘மாவீரன்’ படத்தின் பட்ஜெட்டே ரூ.32 கோடி என்று கூறப்படும் நிலையில் பட்ஜெட்டை விட அதிகமாக ஓடிடி உரிமை மட்டும் வியாபாரமாகி, தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.