லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தை இயக்குவது தனுஷ்-சிவகார்த்திகேயன் இயக்குனரா? சரியான சாய்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் சுமாரான வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்க இருக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த ’கொடி’, சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் கூறிய கதை லெஜண்ட் சரவணனுக்கு பிடித்து விட்டதாகவும் எனவே அவரது அடுத்த படத்தை இயக்குவது துரை செந்தில் குமார் தான் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் லெஜண்ட் சரவணன் சரியான நபரை தேர்வு செய்துள்ளார் என்று கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.