இளமை பருவத்திற்கு திரும்பிய தனுஷ்.. நயன்தாராவுக்கு வீடியோவை டேக் செய்த நெட்டிசன்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2024]

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தற்போது இளமை பருவத்திற்கு திரும்பியதை போல கெட்டப்பில் உள்ளனர். இது குறித்த வீடியோக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு, நயன்தாராவுக்கு டேக் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தற்போது நடித்து வரும்’ இட்லி கடை’ படத்திற்காக இளமை தோற்றத்துக்கு திரும்பியுள்ளார். மீசை இல்லாமல், டீன் ஏஜ் இளைஞனைப் போல் இருக்கும் அவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், சிம்புவும் தனது அடுத்த படத்துக்காக இளமை தோற்றத்துக்கு திரும்பியுள்ளார்.

தனுஷ், சிம்புவின் இளமை தோற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் 40 வயதைத் தாண்டிய நிலையில், இப்போது கூட டீன் ஏஜ் இளைஞர்களைப் போல உள்ளனர் என கமெண்ட் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், அதை நயன்தாராவுக்கு டேக் செய்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை பகிரவும் என கமெண்ட் அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், நயன்தாரா ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு பதிலடி கமெண்ட்ஸ் பதிவு செய்து வருவதால், சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சௌந்தர்யாவை பொளந்து விடுங்க சார்.. விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா பாடி லாங்குவேஜ் உடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எரிச்சல் அடைந்த பார்வையாளர்கள் 'சௌந்தர்யாவை

பவர் ஸ்டார் பவன் கல்யாணின்'ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்':  இறுதிக்கட்ட படப்பிடிப்பு..

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான 'ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1:  ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' மூலம் சரித்திரம் படைக்க உள்ளார்.

மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் பேகனின் வரலாறு!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் நெல்லை சுப்பையா அவர்கள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பேகனின் கதையை விவரித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு?  சீசன் 10 சிறப்பு சுற்று “சூப்பர்  ஸ்டார் ஹிட்ஸ்”

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் 6 முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர்.  

'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசை வாய்ப்பு.. சாம் சிஎஸ் நெகிழ்ச்சி பதிவு..!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார்.