கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் இப்படிப்பட்டவரா? தனுஷ் - சிம்பு பட நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை பவித்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தர்ஷன் குறித்து தனுஷ், சிம்புவுடன் நடித்த நடிகை கூறி உள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சமீபத்தில் இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலையில் அவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பரபரப்பான கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ மற்றும் சிம்பு நடித்த ‘குத்து’ உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா, ‘தர்ஷன் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ’தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறதே தவிர அவருக்கு அப்படி ஒன்றும் செல்வாக்கு இல்லை என்றும், அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்த வேட்பாளர்கள் எல்லாம் தோல்வியை தான் தழுவியுள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தர்ஷனை தைரியமாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய காவல்துறையினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

 

More News

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் மல்டிஸ்டார் படமா? இணையும் இரண்டு ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான முத்தையாவின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

'விடாமுயற்சி' படப்பிடிப்பை உறுதி செய்த அர்ஜுன்.. ரிலீஸ் தேதியும் இதுதான்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த

ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பு.. பிரபல கலை இயக்குனரிடம் ஒப்படைத்த அரசு..!

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் உருவான திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த பிரபலம் ஒருவருக்கு ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பை அரசு ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

50 கோடி வசூலை நெருங்கியபோதும் 'கருடன்' தயாரிப்பாளருக்கு ஒரு குறை: என்ன நடந்தது?

சூரி  நடித்த 'கருடன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பயோபிக் படத்தை இயக்க மாட்டேன்.. காரணம் இதுதான்: ஸ்ருதிஹாசன்

இசைஞானி இளையராஜா உட்பட பல திரையுலக பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் கமல்ஹாசன் பயோபிக் திரைப்படத்தை நான் இயக்க மாட்டேன்