தனுஷூடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த செல்வராகவன்.. திரையுலகில் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷூடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்துள்ள செல்வராகவனின் அறிவிப்பால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதனை அடுத்து புரமோஷன் பணிகளும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’பகாசூரன்’ என்ற படத்தின் படபிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படமும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
முதல் முறையாக தனுஷ் மற்றும் செல்வராகவன்ஆகிய இருவரும் நடித்த படங்கள் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாக இருப்பதை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வராகவன், நட்ராஜ் சுப்பிரமணியன், ராதாரவி, கே ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பிஎல் தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
See you all Feb 17 th in theatres !
— selvaraghavan (@selvaraghavan) January 27, 2023
Protect what's yours ! pic.twitter.com/EneRC5OKbH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments