தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்  தந்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தனுஷ் தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. அது மட்டுமின்றி பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைவதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மதுக்கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு: மாற்று வழியை கண்டுபிடித்த மதுப்பிரியர்கள்!

தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகளை மூட கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சைவ உணவில் பேலியோ டயட்டா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம்!

உடல் பருமனை குறைக்க விரும்பும் பலர் தற்போது பேலியோ டயட் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பேலியோ டயட்டை பின்பற்றுவது எப்படி? எளிய வழிமுறை!

நாகரிக சமூகம் உருவாவதற்கு முன்பு வரை மனிதர்கள் வேட்டையாடியே உணவுகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

"ஒன்றிய அரசு" என அழைக்க காரணம் என்ன....? முதல்வர் முக.ஸ்டாலின் பதில்....!

ஒன்றியம் என்ற வார்த்தையில், கூட்டாட்சித் தத்துவம் உள்ளதால், அதை பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என முதல்வர் கூறியுள்ளார்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'.