close
Choose your channels

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: இயக்குனர் , தயாரிப்பாளர் யார்?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் தனுஷ், பிரபல இயக்குனர் சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணையும் மும்மொழி படம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

கோலிவுட் பிரபல நடிகர் தனுஷ் எந்தவித கதாபாத்திரத்திலும் சிறந்த நடிக்கும் தன்மை உடையவர். அவரது பன்முகத்தன்மை நடிப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். நடிப்புக்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தற்போது டோவுட்டில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் இணைகிறார். இந்த இணைப்பு வணிகரீதியிலான வெற்றிப்படத்தை தரும்.

தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாககவுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது. நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசியுடன், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு யூனிட்) தயாரிப்பு நிறுவனமான சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரால் இத்திரைப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. .

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார். இந்த படம் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் குழுவினர் பல்வேறு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிக விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment