தனுஷ் - சேகர் கம்முலா படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதன்படி இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ் நடித்த ’குட்டி’ மற்றும் ’வேங்கை’ ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் தற்போது மீண்டும் தனுஷின் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நாகார்ஜுனா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.