தமிழ், தெலுங்கில் தயாராகும் தனுஷின் 'D51': படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது தனது 50வது படத்தை நடித்து இயக்கி முடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தனுஷின் 51 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் ஸ்ரீ அமிகோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் கூறப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 24ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் மும்பை மற்றும் கொச்சியில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு அரசியல் த்ரில் கதையம்சம் கொண்டது என்றும், 40 வருடங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் மற்றும் மாபியா கூட்டம் நிகழ்த்திய சில சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

More News

மாயாவுக்கு 2ஆம் இடம் கூட கிடைக்கவில்லையா? அப்ப ரன்னர் அப் யாரு?

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தகவல் நேற்றே கசிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

5 நிமிடங்கள்.. ஒரே ஷாட்.. ஃபைட் சேஸிங் காட்சிகள்.. விஷால் அடுத்த படத்தில் ஒரு ஆச்சரியம்..!

விஷால் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் 5 நிமிடங்கள் கொண்ட சேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நான் மட்டுமல்ல, என் கணவரும் கர்ப்பமாக உள்ளார். அமலாபால் பதிவு செய்த அதிர்ச்சி புகைப்படம்..!

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

டைட்டில் வின்னர் யார் என கசிந்த தகவல்.. முதல் வாழ்த்து கூறிய பிரதீப் அந்தோணி..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில்  டைட்டில் வின்னருக்கான எபிசோட் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்.. .ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த உறுதியான தகவல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும். இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, தினேஷ், மாயா