இதுல கூட போட்டியா? 5 நிமிட இடைவெளியில் ரஜினிக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்-நயன்.. கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள்..!

  • IndiaGlitz, [Thursday,December 12 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஐந்து நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக, அந்த வாழ்த்து செய்தியில் கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள் உள்ளதை பார்த்து, ரசிகர்கள் இதில் கூட போட்டியா? என்று கமெண்டில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் 12:29 மணிக்கு, நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு ஐந்து நிமிடம் கழித்து, அதாவது 12:34 மணிக்கு, தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருவரது வாழ்த்து செய்தியில் உள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை பார்த்து, இது தற்செயலாக நடந்ததா? அல்லது போட்டிக்காக வாழ்த்து பதிவு செய்யப்பட்டதா? என்று, தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இடையே வாக்குவாதம் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஊடகங்களை எச்சரித்த நடிகை சாய் பல்லவி..!

தன்னை பற்றி பொய்யான மற்றும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டால் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது

3வது முறையாக முன்னணி இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முன்னணி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் உருவான இரண்டு படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது மூன்றாவது

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூன்று குரங்குகள்.. தன்னை பற்றி அவதூறாக பேசியவர்கள் குறித்து நயன்தாரா.. வீடியோ வைரல்..!

தன்னை பற்றி அவதூறாக பேசிய மற்றும் பேசிக் கொண்டிருக்கும் மூன்று நபர்களை குரங்குகள் என்று நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் எனது மனைவியும் பிரிகிறோம்: 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெற்ற சீனு ராமசாமி

நானும் எனது மனைவியும் பிரிகிறோம் என 17 வருட திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.