மீண்டும் மணிரத்னம் உடன் மோதும் தனுஷ்?

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் ’பொன்னியின் செல்வன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’நானே வருவேன்’ திரைப்படம் வசூல் அளவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பிப்ரவரி 17ஆம் தேதி ’வாத்தி’ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளி போவதாகவும் அனேகமாக ஏப்ரல் 28ஆம் தேதி தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் மணிரத்னம் படத்துடன் தனுஷ் படம் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.