தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான போது தனது அதிருப்தியை தனுஷ் தெரிவித்து இருந்தார் என்பதும் ரசிகர்களும் இந்த படமும் திரைக்கு வரவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய ’மாறன்’ என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம், முன்னணி ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வதந்தியா? அல்லது உண்மையான தகவலா? இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களின் இந்த கேள்விகளுக்கு விரைவில் படக்குழுவினர் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.