முதல் படம் ரிலீஸாகும் முன்பே அதே இயக்குனருடன் இன்னொரு படம்.. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் முதல் முதலாக இணைந்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணைந்த முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது ’டி50’ என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் ’டி51’ படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are elated to sign the visionary @ArunMatheswaran for our next venture, starring @dhanushkraja ✨#WunderbarFilms #Dhanush pic.twitter.com/s65u5x1mge
— Wunderbar Films (@wunderbarfilms) August 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com