தனுஷும் 'குக் வித் கோமாளி' போட்டியாளரும் ஒரே பள்ளியில் படித்தவர்களா?

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குக் வித் கோமாளி சீசன் 1ஐ விட சீசன் 2 மிகப் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் இந்த சீசனில் கலந்து கொண்ட ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் சிலருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் பாபா பாஸ்கர். இவர் குக்கா? அல்லது கோமாளியா? என்று சில சமயம் சந்தேகமடையும் அளவுக்கு முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் ஜாலியாகவும் இந்த போட்டியில் ஈடுபட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் பாபா பாஸ்கர் ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தனுஷ், பாபா பாஸ்கர் ஆகிய ஆகிய இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பதும் இருவருக்கும் இரண்டு வயது மட்டுமே வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடித்த பல படங்களுக்கு பாபா பாஸ்கர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' ஷகிலா மகள் பிக்பாஸ் போட்டியாளரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அனேகமாக ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

திமுக-வுக்கு வாக்களித்தால், உங்கள் கதை முடிந்துவிடும்...! ராமதாஸ் பிரச்சாரம்...!

எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த, ராமதாஸ் திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று கூறி  பிரச்சாரம் செய்தார்.

நல்லவருக்கு ஓட்டுப்போடுங்கள்...! அதிமுக-விற்கு  வாக்கு சேகரித்த வாசன்....!

'பொல்லாதவர்களுக்கு வாக்கு போடாதீர்கள், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று தமாகா  தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழிசையால் புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!

சாலையில் விபத்து நேர்ந்த ஒருவருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கருத்துக் கணிப்பு என்பவை பொய்ப் பிரச்சாரங்களே… தொண்டகளுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு பெயரில் நடைபெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர்