close
Choose your channels

'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய அப்டேட்.. விரைவில் மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

Tuesday, June 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவருடைய கேரக்டர் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. மிகப்பெரிய பொருள் செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த சிவராஜ்குமார் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர்களிடம் சிவராஜ் குமார் விடை பெற்றுக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று தயாராக இருப்பதாகவும் விரைவில் இந்த போஸ்டர் வெளியாகும் என்றும் பல குழுவினர்களிடமிருந்து தகவல் கசிந்துள்ளது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ’உரியடி’ விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment