தனுஷின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. மூன்றாம் முறை இணையும் கூட்டணி..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இணைந்து உள்ளதாகவும் மூன்றாம் முறையாக இந்த படத்தின் கூட்டணி இணைய உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'TERE ISHK MEIN’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த ’Raanjhanaa’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் ஆனதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ் - ஆனந்த் எல்.ராய் இணைந்த இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தனுஷின் இந்த படம் வெற்றி அடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.