ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது தங்கை செளந்தர்யாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய பக்கத்தை ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் மனைவி ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அறிமுகம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தும் ஐஸ்வர்யாவை இன்ஸ்டா உலகிற்கு வரவேற்பு அளித்துள்ளார்.