close
Choose your channels

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்: அட்டகாசமான அறிவிப்பு!

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவான ’3’, ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ’மாரி’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் தெரிந்ததே. இருப்பினும் அதன் பின்னர் இருவரும் இணையாமல் தனித்தனியாக பணிபுரிந்து வந்தனர். ஆனாலும் விரைவில் இருவரும் விரைவில் இணைந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான ’பட்டாஸ்’ படத்தில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேக்-மெர்வின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதுதான் அட்டகாசமான செய்தி. இதனை அடுத்து தனுஷ் படத்தில் அனிருத் இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் இந்தப் பாடலை தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment